Thursday, November 6, 2014

ஒத்தையில உலகம் மறந்து போச்சு.....



ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையிலே ...

அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
இவன் விழிகளில் விடுகதையோ ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?

ஒத்தையிலே ...

நமக்கென இருந்தோமே தினசை பிரிந்தோமே
திசைகளை பிரிந்தோமே
கல்யாண காற்றினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

ஒத்தையிலே ...

Saturday, September 13, 2014

பைத்தியம்

டேய்     நாயா ...

நீ
என் மீது மட்டும்தான்  பைத்தியம்  என்று நினைத்தேன்
உன் முடிவுக்கு பின்புதான் புரிந்தது
நீ பிறவிலே பைத்தியம்  என்று...

Wednesday, September 10, 2014

புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன்...




புதிய  உலகை  புதிய  உலகை தேடி  போகிறேன்  என்னை  விடு
விழியன்  துளியில்  நினைவை  கரைத்து ஓடி  போகிறேன் என்னை விடு

பிரிவில்  தொடங்கி  பூ
த்ததை பிரிவில்  முடிந்து  போகிறேன்
மீண்டும்  நான்   மீள   போகிறேன்... தூரமாய்  வாழ  போகிறேன்

 புதிய  உலகை..  புதிய  உலகை.. தேடி  போகிறேன்  என்னை  விடு
விழியன்  துளியில்  நினைவை  கரைத்து ஓடி போகிறேன் என்னை  விடு

மார்பில்  கீறினாய்..  ரணங்களை வரங்கள்  ஆகினாய்.. .
தொழில்  ஏறினாய்   எனை  இன்னும் உயரம்  ஆகினாய்
உன்  விழி  போல  மண்ணில்  எங்கும்  அழகு  இல்லை  என்பேன்
உன்  விழி  இங்கு  கண்ணீர்  சிந்த விலகி  எங்கே  சென்றேன்
மேலே  நின்று  உன்னை  நாளும் காணும்  ஆசையில்
 புதிய  உலகை  புதிய  உலகை தேடி  போகிறேன்  என்னை  விடு

யாரும்  தீண்டிட  இடங்களில்  மனதை  தீண்டினாய்
யாரும்  பார்த்திட   சிரிப்பை  ஏன்   இதழில்  தீட்டினாய்
உன்  மனம் போல  விண்ணில்  எங்கும் அமைதி  இல்லை  என்றேன்
உன்  மனம்  இன்று  வேண்டாம்  என்றே பறந்து  எங்கே  சென்றேன்
வேரூர்  வானம்  வேரூர்  வாழ்கை என்னை  ஏற்குமா

 புதிய  உலகை  புதிய  உலகை
தேடி  போகிறேன்  என்னை  விடு

பிரிவில்  தொடங்கி  பூத்
தை பிரிவில்  முடிந்து  போகிறேன்
மீண்டும்  நான்   மீள   போகிறேன் தூரமாய்  வாழ  போகிறேன்

 புதிய  உலகை  புதிய  உலகை
தேடி  போகிறேன்  என்னை  விடு 


Thursday, November 28, 2013

கர்வம்

நமக்கு தான் எல்லாம் தெரியும்.
மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது
என்று நினைக்காதீர்கள்......
நமக்கு
அனைத்தையும் கற்றுகொடுத்தவர்களே

மற்றவர்கள் தான்......
Source:என்னை தேடும் நான்

பிரச்சனை

பிரச்சனைகளை பற்றி மட்டும் சிந்திப்பதை விட்டு விட்டு,
பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றி சிந்தித்தால்..
பிரச்சனைகள் தீர்ந்து போகும்.....
Source:என்னை தேடும் நான்

Tuesday, October 1, 2013

உனது பலம்,பலவீனம்

உனது பலம்... உனது எதிரிக்கு பலவீனம்....
உனது பலவீனம்... உனது எதிரிக்கு பலம்....
பலவீனமாக இருந்தாலும்
பலத்துடன் இருப்பது போல் காண்பித்து கொள்.
உனது பலவீனத்தை மற்றவர்கள் அறிய
ஒரு போதும் இடம் கொடுக்காதே....!!!
Source:என்னை தேடும் நான்